Header Ads

Header ADS

Operating System - Grade 07 | Unit 2

பணிசெயல் முறைமை 

அலகு 02


01. பணிசெயல் முறைமை என்றால் என்ன?
  • பணிசெயல் முறைமை என்பது கணினிக்கும் பயனாளருக்கும் இடையே ஒரு தொடர்பினை ஏற்படுத்தும் ஒரு மென்பொருள் அதாவது கணனிச் செய்நிரல் ஆகும்.
02. பணிச்செயல் முறைமை மூலம் நடைபெறும் பணிகள் யாவை?
  • பயனர் இடைமுகத்தை வழங்குதல்.
  • மையமுறைவழி அலகின் தொழிலைக் கட்டுப்படுத்துகின்றது.
  • கணினியின் நினைவகத்தை கையாளுகின்றது.
  • தேக்கச் சாதனங்களின் தொழிலைக் கட்டுப்படுத்துகின்றது.
  • கோப்புக்களையும், கோப்புறைகளையும் பாதுகாக்கின்றது.
  • பயனாளர் பெயர், கடவுச் சொல் என்பவற்றின் மூலம் கணினியின் பாதுகாப்பை உறுதிபடுத்துகின்றது.
  • வன்பொருளை தொழிற்படச் செய்கின்றது.
03. கணினிகளில் பயன்படுத்தப்படும் பணிசெயல் முறைமைகளுக்கு உதாரணம் தருக?
  • மைக்ரோசொப்ட் டொஸ் (MS DOS)
  • மைக்ரோசொப்ட் விண்டோஸ் (Microsoft Windows)
  • அப்பிள் மக்னின்ரொஷ் (Mac OS)
  • லினக்ஸ் (Linux)
    • உபுந்து (Ubuntu)
    • பெடோரா (Fedora)
04. சூட்டிகை தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் பணிசெயல் முறைமைகளுக்கு உதாரணம் தருக?
  • அன்ட்றொயிட் (Android)
  • IOS
  • பிளாக்பெரி OS
  • விண்டோஸ் மொபைல் OS
05. பணிசெயல் முறைமைகளின் சின்னங்களை  அடையாளம் காண்க?




06. கணினியின் தேக்கச் சாதனங்கள் என்றால் என்ன?
  • கணினியில் தரவுகள், தகவல்கள், செய்நிரல்கள் ஆகியவற்றைத் தேக்கி வைப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் தேக்கச் சாதனங்கள் எனப்படும்.
07. கணினியின் தேக்கச் சானங்களை அவற்றின் உற்பத்திற்குப் பயன்படுத்தப்பட்டு;ள்ள தொழிநுட்பத்துக்கேற்ப எவ்வாறு வகைப்படுத்தலாம்?
  1. காந்த ஊடகச் சாதனங்கள் (உ+ம்) :- வன்தட்டு, காந்த நாடா, நெகிழ் வட்டு 
  2. ஒளியியல் ஊடகச் சாதனங்கள் (உ+ம்) இறுவட்டு, புளுறே வட்டுக்கள்
  3. திண்ம நிலை ஊடகச் சாதனங்கள் (உ+ம்) பளிச்சீட்டு நினைவகம்
08. தேக்கச் சாதனங்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தரவுகள், தகவல்கள், செய்நிரல்கள் என்பவற்றிற்கு உதாரணம் தருக?
  • ஆவணங்கள்
  • குரலும் ஒலிகளும்
  • காணொளிகள்
  • படங்கள்
  • சொல்முறைவழிப்படுத்தி மென்பொருள்
  • பணிசெயல் முறைமைகள்
09. காந்த ஊடகச் சாதனங்கள் என்றால் என்ன?
  • காந்த ஊடகச் சாதனங்கள் என்பது காந்த இயல்புள்ள மேற்பரப்பை அல்லது நாடாவைக் கொண்டுள்ள சாதனங்கள் ஆகும்.
10. காந்த ஊடகச் சாதனங்களுக்கு உதாரணம் தருக?
  • காந்த நாடாக்கள் 
  • நெகிழ் வட்டுக்கள் 
  • வன் வட்டுக்கள் 
11. வன் வட்டுக்கள் தொடர்பாக சிறுகுறிப்பு வரைக?
  • வன் வட்டுக்கள் காந்த இயல்புள்ள வட்டைக் கொண்டது ஆகும்.
  • வன் வட்டுக்கள் இரு வகையாக பாகுப்படுத்தப்படுகின்றது.
    • உள்வாரி வன் வட்டு
      • அதிகளவு தகவல்களை தேக்கி நிலையாக வைத்திருக்கின்ற கணினித் தொகுதியிலுள்ள காந்த ஊடகம் ஆகும்.
    • வெளிவாரி வன் வட்டு
      • வெளி இடங்களுக்கு கொண்டு செல்லக்கூடியதாக உள்ள ஒரு வெளித் தேக்கச் சாதனம் ஆகும்.
  • இவற்றை 500GB, 1TB, 2TB, 4TB என்றவாறு பல்வேறு கொள்திறன்களில் தெரிந்தெடுக்கலாம்.
12. காந்த நாடாக்கள் தொடர்பாக சிறுகுறிப்பு எழுதுக?
  • காந்த நாடா என்பது காந்தத் திரவியத்தினால் மூடப்பட்ட ஒரு மெல்லிய பிளாஸ்ரிக் நாடாவாகும்.
  • இவற்றில் ஒலி, உருக்கள், கணினித் தரவுகள் ஆகியவற்றைத் தேக்கி வைக்கலாம்.
  • இப்போது காந்ந நாடாக்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதில்லை.
13. நெகிழ்வட்டு தொடர்பாக சிறுகுறிப்பு எழுதுக?
  • இவற்றில் சிறிய அளவில் கோப்புக்களை தேக்கி வைக்க முடியும்.
  • இது பொதுவாக 1.44ஆடீ கொள்திறனைக் கொண்டது.
  • நெகிழ் வட்டு ஒரு வெளித் தேக்கச் சாதனம் ஆகும்.
  • நெகிழ் வட்டினை பயன்படுத்துவது குறைவு ஆகும்.
14. ஒளியியல் ஊடகச் சாதனங்கள் என்றால் என்ன?
  • ஒளியியல் ஊடகச் சாதனங்கள் என்பது லேசர்க் கதிர்கள் மூலம் தரவுகளை எழுதுதலும், வாசித்தலும் நடைபெறும் ஒரு தேக்கச் சாதனம் ஆகும்.
15. ஒளியியல் ஊடகச் சாதனங்களுக்கு உதாரணம் தருக?
  • இறுவட்டுக்கள்
  • இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டுக்கள்
  • புளுறே வட்டுக்கள்
16. இறு வட்டுக்கள் தொடர்பாக சிறுகுறிப்பு எழுதுக?
  • இறு வட்டுக்கள் இரு வகையானதாக காணப்படுகின்றது.
    • CD - R – தரவுகளினை ஒரு தரம் மாத்திரமே எழுத முடியும்.
    • CD - RW – தரவுகளை அழித்து பல தடவைகள் எழுத முடியும்.
  • இத்தனைய இறு வட்டுக்கள் 650MB - 700MB கொள்திறன் கொண்டவை ஆகும்.
17. இலக்கமுறைப் பல்திறவாற்றல் தொடர்பாக சிறுகுறிப்பு எழுதுக?
  • இறு வட்டுக்கள் இரு வகையானதாக காணப்படுகின்றது.
    • DVD - R – தரவுகளினை ஒரு தரம் மாத்திரமே எழுத முடியும்.
    • DVD - RW – தரவுகளை அழித்து பல தடவைகள் எழுத முடியும்.
  • இத்தனைய இறு வட்டுக்கள் 4.7GB, 8.5GB, 15GB, 30GB கொள்திறன் கொண்டவை ஆகும்.
18. திண்ம நிலை ஊடகச் சாதனங்கள் என்றால் என்ன?
  • வன் வட்டுக்கள், இறு வட்டுக்களில் உள்ளது போன்று தரவுகளை எழுதுவதற்கும், வாசிப்பதற்கும் இயங்கும் பாகங்கள் இல்லாமையினால் இது திண்ம நிலை ஊடகச் சாதனம் எனப்படும்.
19. கணினி கோப்பு என்றால் என்ன?
  • கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆவணம், பாட்டு, படம் போன்ற அனைத்தும் கோப்பு எனப்படும்.
20. கோப்பின் இரு பகுதிகளும் எவை?
  • கோப்பின் பெயர் (கோப்பினை இனங்காண்பதற்கு பயன்படுகிறது.)
  • கோப்பின் நீட்சி (கோப்பின் பிரயோக மென்பொருளை இணங்கானுதல்)
21. விண்டோஸில் கோப்புறையொன்றை உருவாக்கல்
  • Windows butto → Search  → windows explore
  • தோன்றுகின்ற பட்டியலில் windows explore என்பதைத் தெரிவு செய்க
  • குறிப்பிட்ட கோப்புறை உருவாக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட பாதையைத் தெரிவு செய்க. 
  • வலது பலகத்தில் ஏதாவது வெற்று இடத்தில் வலது சொடக்குச் செய்யவும் 
  • New → பட்டியலில் Folder  என்பதைத் தெரிவு செய்க அது விரிவாகும் அல்லது  ஏதாவது வழி உருவாகும்.
22. கோப்புறையை / கோப்பை மீள்பெயரிடல்
  • குறித்த உருப்படி மீது வலது பொத்தானைக் சொடக்குக. வரும் பட்டியலில் Rename  என்பதைத் தெரிவு செய்க அல்லது கோப்பினைத் தெரிவு செய்து F2 சாவியை அழுத்தவும்.
  • புதிய பெயரைத் தட்டெழுத்துச் செய்து Enter  சாவியை அழுத்தவும் அல்லது  Rename ஐ சொடக்கவும்.
23. கோப்புறையை / கோப்பை வேறிடத்திற்குப் பிரதியிடல் / நகர்த்தல்
  • பிரதியிடல் அல்லது ஒட்டுதல்
    • கோப்புறையை / கோப்பைத் தெரிவு  செய்க Copy  (சிறுபடம் , குறுக்கு வழிச்சாவி Ctrl +C  சுட்டியின் வலது பொத்தானை சொடுக்கி) தெரிவு செய்க
    • பிரதி செய்ய வேண்டிய இடத்தைத் தெரிக Paste  (சிறுபடம்இ குறுக்கு வழிச்சாவி Ctrl +V  சுட்டியின் வலது பொத்தானைச் சொடுக்கி) தெரிவு செய்க
  • நகர்த்தல் மற்றும் ஒட்டுதல்
    • கோப்புறையை / கோப்பைத் தெரிவு செய்க Cut  (சிறுபடம்இ குறுக்கு வழிச்சாவி Ctrl +X  சுட்டியின் வலது பொத்தானைச் சொடுக்கி) தெரிவு செய்க
    • நகர்த்த வேண்டிய இடத்தைத் தெரிவு  செய்து Paste  (சிறுபடம்இ குறுக்கு வழிச் சாவி Ctrl +V , சுட்டியின ; வலது பொத்தானைச் சொடுக்கி) தெரிவு செய்க
  • இழுத்து விடு
    • உருப்படியைத் தெரிவு செய்க(கோப்பு / கோப்புறை ) Ctrl  சாவியுடன் அல்லது Ctrl சாவியின்றி வேறு இடங்களுக்கு இழுத்து விடுக.
24. கோப்புக்களின் பண்புகள் எவை?
  • கோப்பு வகை 
  • கோப்பின் அளவு 
  • கோப்பு தேக்கி வைக்கப்பட்டுள்ள இடம் 
  • கோப்பு மாற்றப்பட்ட திகதி 
  • கோப்பின் பெயர் 
  • கோப்பு கடைசியாக திறந்த திகதியும் நேரமும் 
25. கோப்புக்கும் கோப்புறைக்குமான வேறுபாடுகளைத் தருக?
  • கோப்புறை 
    • கணினிகளில் மென்பொருள்கள், ஆவணங்கள், தரவுகள், உபகோப்புறைகள் என்பவற்றிற்கான மெய்நிகர் இடம் ஒன்றாகும். கணினியில் கோப்புகளையும் (உபகோப்புறைகள்) தரவுகளையும்  ஒழுங்கமைத்துச் சேமிப்பதற்குக் கோப்புறைகள் உதவுகின்றன.
  • கோப்பு 
    • கணினிக் கோப்பொன்றானது கணினி சேமிப்புச் சாதனமொன்றில் தரவுகளைத் தனித்துவமாகப் பதிவு செய்வதற்கான ஒரு வளமாகும். காகிதத்தில் சொற்களை எழுதுவது போல் தகவல்களைக்  கணினிக் கோப்பில் பதியலாம். பல்வேறு நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு  வகையான கணினிக் கோப்புகள் காணப்படுகின்றன. 
26. கோப்புக்கள் பெயரை மாற்றுதல் , தற்காலிகமாக அழித்து விடுதல் , நிரந்தரமான அழித்து விடுதல் என்பவற்றுக்கான கட்டளைகளைத் தருக?
  • கோப்புக்கள் பெயரை மாற்றுதல் - Ctrl + Rename
  • தற்காலிகமாக அழித்து விடுதல் - Delete
  • நிரந்தரமான அழித்து விடுதல் - Shift + Delete
27. கோப்புறையின் நிறம் யாது?
  • மஞ்சள் 
28. கோப்புறையின் பண்புகளை இணங்காணுதல் 

தொகுப்பு :- N.VINOTH(BA in ICT)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.