Header Ads

Header ADS

Importance of Computers - Grade 06 | Unit 1

 கணினியின் முக்கியத்துவம் 

அலகு 01


01. கணினி என்றால் என்ன?
  • கணினி என்பது தரவுகளை உள்வாங்கி அதனை முறைவழிப்படுத்தி அம் முறைப்படுத்திய தரவுகளை தகவல்களாக தருகின்ற ஓர் இலத்திரனியல் சாதனம் கணினி எனப்படும்.
02. கணினியின் அடிப்படைத் தொழில்கள் யாவை?
  • தரவுகளை உள்ளிடுதல் 
  • தரவுகளை முறைவழிப்படுத்தல் 
  • தகவல்களை வெளியிடுதல் 
03. கணினியின் சிறப்பியல்புகள் எவை?
  • கதியும் திறனும் :- வழங்கும் எந்தவொரு தொழிலையும் மிகக் குறுகிய நேரத்தில் செய்து முடிக்கலாம் ( ஒரு செக்கனுக்கு பல பில்லியன் செயன்முறைகளை செய்யலாம்)
  • செம்மை :- தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் சரியாக உள்ளிடும் போது சரியான தகவல்களைப் பெற முடியும்.
  • நம்பகத்தன்மை :- செயன்முறையிலும் வருவிளைவிலும் நம்பிக்கை கொள்ளலாம்.
  • மாறாத்தன்மை :- ஒரு குறித்த செயன்முறை தொடர்பாக ஒரே உள்ளீட்டை வழங்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கிடைக்கும் வருவிளைவுகள் சமமாகும்.
  • தேக்கக் கொள்திறன் :- அதிகளவு தகவல்களை தேக்கி வைக்கத்தக்கதாக  இருக்கும் அதே நேரம் அவற்றை ஒரு குறித்த செயன்முறைக்குத் தேவையான எச்சந்தர்ப்பத்திலும் பெறலாம்.
  • கிரயம் :- கொள்வனவு செய்வதற்கு அதிகளவு பணம் செலவிடப்படுகின்ற போதிலும் பின்னர் பராமரிப்பதற்கு அதிக பணம் தேவைப்படுவதில்லை. 
  • நுண்மதி :- வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்பத் தொழிற்படும். எனினும் மனிதனைப் போன்று சுயமாக சிந்திக்க முடியாது.
04. கணினி உட்பொதிந்த சாதனங்கள் என்றால் என்ன?
  • கணினி செயநிரல்களுக்கு ஏற்ப தொழிற்படும் சாதனங்கள் கணினி உட்பொதிந்த சாதனங்கள் எனப்படும்.
05. கணினி உட்பொதிந்த சாதனங்களுக்கு உதாரணம் தருக?
  • துணிச் சலவைப் பொறி 
  • நவீன தொலைக்காட்சிகள் 
  • சூட்டிகை செல்லிடத் தொலைபேசிகள் 
  • நவீன மோட்டார் வாகனம் 
  • இலக்கமுறை வெப்பமானி 
06. கணினியின் அடிப்படைக் கூறுகளை வடைபடம் மூலம் காட்டுக?


07. கணினியின் அடிப்படைக் கூறுகள் எவை?
  • உள்ளீட்டுச் சாதனங்கள் 
  • வெளியீட்டுச் சாதனங்கள் / வருவிளைவு சாதனங்கள் 
  • மைய முறைவழி அலகு / மத்திய கட்டுப்பாட்டு அலகு 
  • முதன்மை நினைவகம் 
  • தேக்கச் சாதனங்கள் 
  • தொடர்பாடல் சாதனங்கள் 
08. உள்ளீட்டு சாதனம் என்றால் என்ன?
  • கணினிக்கு தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் உள்ளீட்டுச் சாதனங்கள் எனப்படும்.
09. உள்ளீட்டு சாதனங்களுக்கு உதாரணம் தருக?
  • விசைப்பலகை (சாவிப்பலகை)
  • சுட்டி 
  • தொடுதிரை 
  • இயக்குபிடி 
  • ஒளிப்பேனா 
  • காந்தப்பட்டி வாசிப்பான் 
  • பட்டைக்குறி வாசிப்பான் 
  • சூட்டிகை அட்டை வாசிப்பான் 
  • காணொளிப் படக் கருவி 
  • இலக்கமுறைப் படக்கருவி 
  • வலைப்படக் கருவி 
  • வருடி 
  • மூடிய தொலைக்கட்சிச் சுற்று 
  • நுணுக்குப்பண்ணி 






10. உள்ளீட்டு சாதனங்களின் வகைகள் யாவை?
  • சுட்டும் / காட்டிச் சாதனங்கள் :- சுட்டி , தொடுதிரை , இயக்கப்பிடி , ஒளிப்பேனா 
  • நேரடிப் பதிவு உள்ளீட்டு சாதனங்கள் :-  காந்தப்பட்டி வாசிப்பான்  , பட்டைக்குறி வாசிப்பான் , சூட்டிகை அட்டை வாசிப்பான் 
  • விம்பமாக்கு , காணொளி உள்ளீட்டு சாதனங்கள் :-  காணொளிப் படக் கருவி , இலக்கமுறைப் படக்கருவி  , வலைப்படக் கருவி ,  மூடிய தொலைக்கட்சிச் சுற்று 
  • வருடிச் சாதனங்கள் :- சமதளப்படுகை வருடிகள் , காந்த மை வரியுரு வாசிப்பான் , ஒளியியல் குறி கண்டறிதல் , ஒளியியல் வரியுரு கண்டறிதல் , வரையியல் பலகை 
  • ஒலி உள்ளீட்டு சாதனங்கள் :- நுணுக்குப்பண்ணி 
11. வெளியீட்டுச் சாதனம் என்றால் என்ன?
  • கணினியில் முறைவழிப்படுத்திய தரவுகளை வெளியே தகவல்களாகப் பெறுவதற்குப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் வெளியீட்டு சாதனங்கள் எனப்படும்.
12. வெளியீட்டு சாதனங்களுக்கு உதாரணம் தருக?
  • கணினித் திரை 
  • அச்சுப் பொறி 
  • வரையில் வரையி 
  • பல்லூடக ஏறிவை 
  • தலையனி கேட்பொலி 
  • ஒலி பெருக்கி 
13. மைய முறைவழி அலகு என்றால் என்ன?
  • வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப தரவுகளை முறைவழிப்படுத்தும் ஓர் இலக்கமுறை சுற்று மைய முறை வழி அலகு எனப்படும்.
14. கணினியின் மூளையாக கருதப்படுவது எது?
  • மைய முறைவழி அலகு 
15. மைய முறைவழி அலகின் கூறுகள் எவை?
  • எண்கணித தருக்க அலகு 
  • நினைவக பதிவகம் 
  • கட்டுப்பாட்டு அலகு 
16. மைய முறை வழி அலகு எங்கு பொருத்தப்பட்டிருக்கும்?
  • தாய்ப்பலகையில் 
17. முதன்மை நினைவகம் என்றால் என்ன?
  • கணினி இயங்கும் போது தரவுகளையும் , அறிவுறுத்தல்களையும் , தகவல்களையும் தற்காலிகமாக சேமித்து வைத்துக் கொள்ளும் சாதனம் முதன்மை நினைவகம் எனப்படும்.
  • இது குறைந்த கொள்ளளவு திறன் கொண்டதாக இருப்பதுடன் மின்சாரம் நிறுத்தப்படும் போது நினைவகத்திலுள்ள அனைத்து விடயங்களும் இழக்கப்படும்.
18. முதன்மை நினைவகத்தின் மறுபெயர்கள் எவை?
  • பிரதான நினைவகம் 
  • தற்காலிக நினைவகம் 
  • தற்போக்கு பெறுவழி நினைவகம் 
19. துணை நினைவகம் என்றால் என்ன?
  • தரவுகளையும் , தகவல்களையும் நிரந்தரமாக சேமிப்பதற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் துணை நினைவகம் எனப்படும்.
20. துணை நினைவகத்தின் மறுபெயர்கள் எவை?
  • வெளி நினைவகம் 
  • நிலையான நினைவகம் 
  • இரண்டாம் நிலை நினைவகம் 
21. துணை நினைவகத்திற்கு உதாரணங்கள் தருக?
  • வன்வட்டு 
  • இறுவட்டு 
  • பல்திறவாற்றால் வட்டு 
  • பளிச்சீட்டு நினைவகம் 
22. தேக்கச் சாதனங்கள் என்றால் என்ன?
  • மீண்டும் பயன்படுத்துவதற்காத் தரவுகள், அறிவுறுத்தல்கள் , தகவல்கள் ஆகியவற்றைத் தேக்கி வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் தேக்கச் சாதனங்கள் எனப்படும்.
23. தேக்கச் சாதனங்களின் இரு வகைகளும் எவை?
  • உள் தேக்கச் சாதனங்கள் 
  • வெளி தேக்கச் சாதனங்கள் 
24. உள் தேக்கச் சாதனங்களுக்கு உதாரணம் தருக?
  • உள் வன்வட்டு 
25. வெளித் தேக்கச் சாதனங்களுக்கு உதாரணங்கள் தருக?
  • இறுவட்டு 
  • இலக்கமுறைக் காணொளி வட்டு 
  • புளூறே 
  • வெளி வன்வட்டு 
  • பேனா செலுத்தி / பளிச்சீட்டு நினைவகம் 
  • நினைவக அட்டை 
26. தொடர்பாடல் சாதனங்கள் என்றால் என்ன?
  • கணினியில் முறைவழிப்படுத்திய தகவல்களைப் பறிமாறுவதற்குப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் தொடர்பாடல் சாதனங்கள் எனப்படும்.
27. தொடர்பாடல் சாதனங்களுக்கு உதாரணங்கள் தருக?
  • வலையமைப்பு இடைமுக அட்டை 
  • மோடம் 
  • வழிப்படுத்தி 

28. மென் பொருள் என்றால் என்ன?
  • கணினியைப் பயன்படுத்தி குறித்த ஒரு நிறைவேற்றுவதற்காகத் தயாரிக்கப்பட்ட கணினி செயநிரல்கள் மென்பொருள் எனப்படும்.
29. மென்பொருளுக்கு உதாரணங்கள் தருக?
  • சொல்முறை வழிப்படுத்தல் 
  • கல்வி மென்பொருள் 
  • வணிக மென்பொருள் 
  • தீர்மானமெடுக்கும் மென்பொருள் 
  • படிம பதிப்பிக்கும் மென்பொருள் 
  • கணித மென்பொருள் 
  • மருத்துவ மென்பொருள் 
  • காணொளி பதிப்பிக்கும் மென்பொருள் 
  • காணொளி விளையாட்டுக்கள் 
30. பாடசாலையில் கணினியின் பயன்பாடுகள் யாவை?
  • பாடசாலைத் தொகுதியில் அலுவலகப் பணிகளை எளிதாகவும் , திறமையாகவும் செய்வதற்குக் கணனியைப் பயன்படுத்துதல்.
  • பாடங்களைக் கற்பதற்குப் கரும்பலகை , புத்தகம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக கணினியைப் பயன்படுத்துதல்.
  • இணையத்தினைப் பயன்படுத்தி பாடம் தொடர்பான மேலதிக விளக்கங்களினை பெற்றுக் கொள்ளுதல்.
31. வங்கியல் துறையில் கணினியின் பயன்பாடுகள் யாவை?
  • பணத்தினை வைப்புச் செய்வதற்கும் பெறுவதற்கும் தன்னியக்க காசாள் பொறியினைப் பயன்படுத்துதல்.
  • பொருள்களை வாங்கும் போது பணத்தை செலுத்துவதற்கும் இலத்திரனியல் அட்டைகளை பயன்படுத்துதல்.
  • வங்கியியல் இணைய வங்கியில் , குறுஞ் செய்தி மூலமான வங்கியியல் போன்றன கணிணிப் பயன்பாட்டின் ஒரு புதிய போக்காகும்.
  32. வைத்தியசாலையில் கணினியின் பயன்பாடுகள் யாவை?
  • உடல் வெப்பநிலையினை அறிவதற்கு இலக்கமுறை வெப்பமானியினை பயன்படுத்துதல். இது உட்பொதிந்த கணினி உள்ள ஒரு சாதனமாகும்.
  • தீவிர சிகிச்சை அலகில் கணினியையும் உட்பொதிந்த கணினி உள்ள சாதனங்களையும் பயன்படுத்துதல்.
  • அறுவைச் சிகிச்சை நிலையத்தில் கணினியையும் உட்பொதிந்துள்ள கணினி உள்ள சாதனங்களையும் பயன்படுத்துதல்.
33. தொழிற்சாலைகளில் கணினியின் பயன்பாடுகள் யாவை?
  • தொழிற்சாலைகளில் மனித உழைப்பினை இழிவளவாக்கி அதற்குப் பதிலாகக் கணினி சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக உற்பத்தி அதிகரித்துள்ளது.
  • தொழிற்சாலைகளில் எந்திரன் (ரோபோ)  தொழிநுட்பவியலை பயன்படுத்திப் பணிகளை எளிதாக செய்யத்தக்கதாக உள்ளது.
34. விவசாயப் பண்ணைகளில் கணினியின் பயன்பாடுகள் யாவை?
  • அறுவடை செய்வதற்கு கணினிகளை பயன்படுத்துதல். உதாரணமாக கூறினால் ரோபோக்களை பயன்படுத்துதல் 
  • நீர் வழங்குதல் போன்ற பணிகளுக்கு கணினி உட்பொதிந்த சாத்தனங்களை பயன்படுத்துதல்.
  • விவசாயப் பண்ணிக்களில் வேலை செய்யும் பணியாளர்களின் தரவுகளை சேமிக்க கணினிகளைப் பயன்படுத்துதல்.

தொகுப்பு :- ஆசான் N.VINOTH (BA in ICT)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.