Header Ads

Header ADS

Use the Computer Laboratory Safely - Grade 06 | Unit 2

 கணினி  ஆய்வு கூடத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துதல் 

அலகு 02


01. கணினி ஆய்வு கூடத்தில் பின்பற்றப்படும் இரு வகையான நடைமுறைகளும் எவை?
  • எமது பாதுகாப்பிற்காக பின்பற்றப்படும் நடைமுறைகள் 
  • கணினி மற்றும் ஏனைய சாதனங்களின் பாதுகாப்பிற்காக பின்பற்றப்படும் நடைமுறைகள் 
02. எமது பாதுகாப்பிற்காக ஆய்வுகூடத்தில் நாம் செய்யவேண்டிய நடைமுறைகள் எவை?
  • மின்னுடன் தொடுக்கப்பட்டிருக்கும் கம்பி, குதை போன்ற சாதனங்களைத் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
  • ஆய்வுகூடத்திலிருந்து வெளியேறும் கதவு பற்றி அறிந்திருக்க வேண்டும்.
  • தீயணை கருவி இருப்பின், அதைப்பற்றி அறிந்திருக்க வேண்டும்.
  • கணினி ஆய்வு கூடத்தில் ஓடிப்பாய்ந்து விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.
03. கணினி மற்றும் ஏனைய சாதனங்களின் பாதுகாப்பிற்காக பின்பற்றத்தக்க நடைமுறைகள் எவை?
  • திரவங்களினால் உபகாரணங்களுக்குச் சேதம் ஏற்படலாம். ஆகையால் ஆய்வு கூடத்திற்கு உணவு, நீர் அல்லது வேறு திரவ வகைகள் ஆகியவற்றைக் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.
  • தூசியை இழிவளவாக்குவதற்குப் பாதணிகளைக் கழற்றி வைத்து விட்டு ஆய்வுகூடத்தினுள்ளே பிரவேசிக்க வேண்டும்.
  • சரியான அறிவுறுத்தல்கள் இல்லாமல் சாதனங்களுக்கு மின் வலுவை வழங்கக் கூடாது.
  • ஆய்வுகூடத்தையும் எல்லா உபகரணங்களையும் தூசி படியாமல் துப்பரவாக வைத்திருக்க வேண்டும்.
  • புறத் தேக்கச் சாதனங்களைக் கணினியுடன் இணைக்கும் போது நச்சு நிரற் சோதனைகளை செய்ய வேண்டும்.
  • பயன்படுத்திய பின்னர் எல்லா உபகரணங்களையும் உகந்தவாறு நிறுத்தம் செய்ய வேண்டும்.
  • பயன்படுத்திய உபகரணங்களை உரிய இடங்களில் வைக்க வேண்டும்.
04. கணினியை இயக்கம் செய்வதற்கான படிமுறைகளினை குறிப்பிடுக?
  • முதலில் கணினி இணைக்கப்பட்டுள்ள ஆளியினை தொழிற்படுத்தி மின் வலுவை வழங்க வேண்டும்.
  • கணினித் தொகுதிகள் தடைப்படாத வலு வழங்களுடன் இணைக்கப்பட்டிருப்பின்  அதனை தொடக்க வேண்டும்.
  • அதன் பின்னர் முறைமை அலகினைத் தொடக்க வேண்டும்.
  • கணினித் தெரிவிப்பியை தொடக்க வேண்டும்.
05. கணினியின் இயக்கத்தை நிறுத்தம் செய்வதற்கான படிமுறைகளைக் குறிப்பிடுக?
  • முதலில் நாம் ஏதேனும் பிரயோக மென்பொருள் இயங்கிக் கொண்டிருக்குமாயின் அதனை மூட வேண்டும்.
  • அதன் பின்னர் பணிநிறுத்தம் கட்டடைகளைத் தெரிந்தெடுத்து சொடக்க வேண்டும்.
  • பணி நிறுத்தியதன் பின்பு தெரிவிப்பியின் ON/OFF பொத்தானின் மூலம் அதன் தொழிற்பட்டை நிறுத்த வேண்டும்.
  • பின்னர் , தடைப்படாத வலு வழங்களையும் மின் வலு  வழங்கல் ஆளியையும் நிறுத்த வேண்டும்.  .
06. கணினி ஒழுக்கவியல் என்றால் என்ன?
  • கணினியை முறையாக கையாளுவதற்கான உரிய பழக்கவழக்கங்களே கணினி ஒழுக்கவியல் எனப்படும்.
07. நாம் கணினி ஆய்வுகூடத்தினை பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய ஒழுக்க முறைகள் எவை?
  • ஏனையோருக்குத் தடையாக அமையாதவாறு பயன்படுத்த வேண்டும். 
  • ஏனையோரின் கணினிச் செயற்பாடுகளில் தலையிடலாகாது.
  • ஏனையோரின் கணினிக் கோப்புக்களையும், ஆவணங்களையும் இரகசியமாகப் பார்ப்பதையும் அனுமதியின்றி பிரதியெடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.
  • கணினிச் சாதனங்களை தக்க அறிவுறுத்தலின்றிப் பயன்படுத்தலாகாது.
  • பணத்தைச் செலுத்தி பெற வேண்டிய மென்பொருள்களை மோசடியாக பயன்படுத்தவோ நகல் எடுக்கவோ கூடாது.
  • ஆசிரியரின் ஆலோசனை இல்லாமல் கணினியில் நிறுவிய எந்தச் செய்நிரலையும் அழித்தல் அல்லது மாற்றல் கூடாது.
  • ஆசிரியரின் மேற்பார்வையின்றி இணையத்தைப் பயன்படுத்தக் கூடாது.
08.  கணினியைப் பயன்படுத்தும் போது பேண வேண்டிய சரியான கொண்ணிலைகள் எவை?
  • எப்போதும் தெரிவிப்பியை கண் மட்டத்தில் அல்லது அதற்குச் சிறிது கீழே வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கண்ணிற்கும் தெரிவிப்பியிக்குமிடையே 40 - 70 சென்றிமீற்றர் இடைவெளி இருக்க வேண்டும்.
  • முதுகை நேராக வைத்து கதிரையில் நன்றாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
  • கால்கள் தரைக்குச் செங்குத்தாக்கவும் பாதங்கள் தரையைத் தொட்டுக் கொண்டும் இருக்க வேண்டும்.
  • சாவிப்பலகையையும் , சுட்டியையும் முழங்கைக்கு நேராக வைக்க வேண்டும்.
09. சரியான கொண்ணிலையைப் பின்பற்றாத போது ஏற்படும் பாதிப்புக்கள் எவை?
  • கண்ணில் நோவு , நித்தமும் கண்ணீர் வருதல் , பார்வைக்குறைபாடு ஆகியன ஏற்படுதல்.
  • முதுகு நோவு ஏற்படுதல்.
  • பாதங்களில் அசெளகரியம்  ஏற்படுதல்.
  • கைவிரல்கள், முழங்கை ஆகியவற்றில் நோவு ஏற்படுதல்.
10. இலத்திரனியல் கழிவுப் பொருட்கள் என்றால் என்ன?
  • கணினி வன்பொருள்களின் தொழிற்பாட்டுக் காலம் முடிவடைந்ததும் அல்லது பயன்படுத்துபவர் அவற்றைப் பயன்பாட்டிலிருந்து அகற்றும் போது அவை இலத்திரனியல் கழிவுப் பொருட்கள் எனப்படும்.
11. இலத்திரனியல் கழிவினால் ஏற்படக் கூடிய நோய்கள் எவை?
  • ஈயம் :- மூளை , ஈரல் மற்றும் இரத்த ஓட்ட சீரின்மை 
  • பேரியம் :- மூளை வீக்கமடைதல் , தசைப் பலவீனம் , இதயப் பாதிப்பு 
  • இரசம் :- நரம்புக் கோளாறு , ஈரல் சிதைவடைதல் 
  • பெரிலியம் :- நுரையீரல் புற்றுநோய் , சுவாச பிரச்சினைகள் 
12. 3R முறை என்றால் என்ன?
  • இலத்திரனியல் கழிவுப் பொருட்களை மிகப் பாதுகாப்பாக வெளியேற்ற பயன்படுத்தும் முறையே 3R முறை எனப்படும்.
13. 3R முறைகள் எவை?
  • பயன்பாட்டை இழிவளவாக்குதல் ( REDUCE )
  • மறுபடியும் பயன்படுத்துதல் ( RECYCLE )
  • மீள்சுழச்சி ( RECYCLE )
14. பயன்பாட்டை இழிவளவாக்குதல் என்றால் என்ன?
  • பயன்படுத்தும் உபகரணங்களை முறையாகப் பராமரித்து நெடுங்காலத்துக்குப் பயன்படுத்துவதன் மூலம் புதிய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதைக் குறைக்கலாம். இதனால் சுற்றாடலிற்கு விடுவிக்கப்படும் கழிவுப் பொருட்களின் அளவு குறைவடையும் இதுவே பயன்பாட்டை இளிவளவாக்கல் எனப்படும்.
15. மறுபடியும் பயன்படுத்துதல் என்றால் என்ன?
  • புதிய உபகரணங்களை வாங்கும் போது அதுவரைக்கும் பயன்படுத்திய பழைய உபகரணம் தொழிற்படும் நிலையில் இருப்பின் அதனை சூழலிற்கு விடுவிக்காமல் வேறொருவருக்கு அன்பளிப்புச் செய்யலாம் அல்லது விற்கலாம். இதுவே மறுபடியும் பயன்படுத்துதல் எனப்படும்.
16. மீள்சுழற்சி என்றால் என்ன?
  • கழிவுப் பொருள்களாகக் கைவிடப்படும் பொருள்களைப் புதிய பொருளாக மாற்றும் செயன்முறை  மீள்சுழற்சி எனப்படும்.
17. கடவுச் சொல் என்றால் என்ன?
  • கணினியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள விடயங்களை அனுமதியற்றோர் அணுகாதவாறு பாதுகாத்து வைப்பதற்குக் கணினிக்கு ஓர் இரகசியச் சொல்லை வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் இரகசியச் சொல் கடவுச் சொல் எனப்படும்.
18. கணினிக்கு கடவுச் சொல்லை வழங்கும் போது கருத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் யாவை?
  •  கடவுச் சொல்லானது எழுத்துகளையும், எண்களையும், குறியீடுகளையும்  சேர்மானமாக கொண்டிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் எட்டு வரியுருக்களைக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளை மேலே சொன்ன வரியுருக்கள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒன்றேனும் இடம் பெற வேண்டும்.
  • கடவுச் சொல் பெயர் , பிறந்த திகதி போன்ற ஊகிக்கத் தக்க ஒரு பதமாக இருக்க கூடாது.
  • கடவுச் சொல் சாடையை வழங்கலாம்.
  • மின்னஞ்சல் முகவரியை வழங்குவதன் மூலம் கடவுச் சொல்லை நினைவு கூறலாம். 
தொகுப்பு :- N.VINOTH ( BA in ICT )

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.